தொலைக்காட்சியில் ஆதார் குறித்த நேர்காணல்
ஆதார் திட்டத்தை வலுக்கட்டாயமாக அரசு அமல்படுத்தத் துவங்கியதிலிருந்தே தொடர்ந்து அதனைச் சுற்றி பல்வேறு சர்ச்சைகளும், அனுமானங்களும் வந்துக் கொண்டே இருக்கின்றன. நாமும் தொடர்ந்து அதில் உள்ள சிக்கல்கள் பற்றியும், ஜனநாயகத்திற்கு ஏற்படவிருக்கும் ஆபத்துகள் குறித்தும் கருத்துக்களை தெரிவித்துக் கொண்டிருக்கிறோம்.
இதன் அடிப்படையில் தந்தி தொலைக்காட்சியிலும், புதியதலைமுறை தொலைக்காட்சியிலும் FSFTN-ன் உறுப்பினர்களான சிபி, கணேஷ் மற்றும் பிரசன்னா ஆகியோர் விவாதத்திலும், நேர்காணலிலும் பங்கேற்றனர். அதன் காணொளியை கீழே காணலாம்.