மின்ணனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த நேர்காணல்

ஜூனியர் விகடன் இதழில் மின்ணனு வாக்குப் பதிவு இயந்திரங்கள் குறித்த ஒரு நேர்காணல் வெளியானது. இதில் FSFTN சார்பாக, புதுவையைச் சேர்ந்த கட்டற்ற மென்பொருள் செயற்பாட்டாளர் கமலவேலன் பதிலளித்திருந்தார்.

மின்ணனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த நேர்காணல்

சனவரி 30, 2019 அன்று வெளிவந்த ஜூனியர் விகடன் இதழில் மின்ணனு வாக்குப் பதிவு இயந்திரங்கள் குறித்த ஒரு நேர்காணல் வெளியானது. இதில் FSFTN சார்பாக, புதுவையைச் சேர்ந்த கட்டற்ற மென்பொருள் செயற்பாட்டாளர் கமலவேலன் பதிலளித்திருந்தார்.

மின்ணனு வாக்கு பதிவு இயந்திரங்களின் மீதான நம்பகத் தன்மையை மேலும் மக்களுக்கு வலுப்படுத்தும் விதத்தில், அதனை இயக்கும் மென்பொருளை பொதுவில் அனைவரின் பார்வைக்கும் கிடைக்கும் படி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார்.

ஜுனியர் விகடனில் வெளிந்தநேர்காணல்

தேர்தல் துறைக்கும், மக்களுக்குமான வெளிப்படைத் தன்மையை இது அதிகரிப்பதோடு மட்டுமில்லாமல், இயந்திரத்தை இயக்கும் மென்பொருளை, நம் போன்ற மென்பொருள் உருவாக்குபவர்களும் ஆராய்ந்து அதில் உள்ள குறைகளை (இருந்தால், வெளிக்காட்டாத வரை இருக்கிறதா இல்லையா என்று நம்மால் உறுதி படுத்த முடியாது) சுட்டிக்காட்டி திருத்தம் செய்து, பாதுகாப்பனதாக்கி, நம்பகத்தன்மையை மேலும் அதிகரிக்கலாம்.

ஆஸ்திரேலியா [1] மற்றும் பெல்ஜியம் [2][3] போன்ற நாடுகளில் இதுபோன்றதொரு முறை அமுலில் உள்ளது. எனவே அங்கே மக்களிலிருந்து மென்பொருள் குறித்த அறிவு பெற்றவர்கள் அதனை ஆராய்ந்து குறைகளை கண்டறிய முடியும்.

இந்திய தேர்தல் துறை ஆணையம், இந்தியாவில் தயாரிக்கப்பட்டு பயன்படுத்தப்படும் மின்ணனு வாக்கு பதிவு இயந்திரங்களின் விவரங்கள் குறித்து 104 பக்க அறிக்கையை [4] வெளியிட்டுள்ளது. இதனை படித்து மேலும் சில தெளிவுகளை நம்மால் பெற இயலும்.

குறிப்பு: நேர்காணலில் பத்திரைக்கையாளர் சயீத் சுஜா என்ற நபர் மின்ணனு வாக்கு இயந்திரத்தை Hack செய்து காண்பித்ததாக கூறியுள்ள தகவல் தவறு. சினிமா பாணியில் சில கதைகளை மட்டும் தெரிவித்து நிகழ்சியை கேலிக்கூத்தாக ஆக்கியிருந்தார். அந்த நிகழ்வை நாம் பொருட்படுத்தாமல் நகர்வதே சிறந்தது.

[1] https://www.elections.act.gov.au/elections_and_voting/electronic_voting_and_counting
[2] https://joinup.ec.europa.eu/news/bug-belgian-voting-machin
[3] https://en.wikipedia.org/wiki/Electronic_voting_in_Belgium
[4] https://eci.gov.in/files/file/8756-status-paper-on-evm-edition-3/