தனிநபரின் தனியுரிமையை பறிக்கின்றதா? தகவல் தொழில்நுட்பச் சட்டம்-2018

தனிநபரின் தனியுரிமைகளை கட்டுபடுத்தும் வகையில் தனிநபரின் தொழில்நுட்பம் சார்ந்த அந்தரங்கங்களை எந்த நேரத்திலும் கண்கானிக்கவும், மேலும் அவர்களின் உருவாக்கபட்ட,வெளியிடபட்ட,பெறபட்ட கணினி சார்ந்த தரவுகளை மறைகுறீயிடு நீக்கம் (Decrypt) செய்யும் அதிகாரத்தை அங்கீகரிக்கபட்ட பாதுகாப்பு நிறுவனங்களுக்கு அளிக்க உள்ளதாக கடந்த டிசம்பர் 20 ஆம் தேதி  இந்திய உள்நாட்டு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை, தனிநபரின் தனியுரிமையானது சட்டதிட்டங்களுக்கும் ,தேவைகளுக்கும்,விகிதாசார அடிபடையிளும்,செயல்திறனை கருத்தில் கொண்டும் ,அமைந்திருக்க வேண்டும் என்னும் உச்ச நீதிமன்றத்தின் தனியுரிமை சார்ந்த தீர்ப்பினை மீறி இயற்றபட்டுள்ளதா! எனும் ஐயம் ஏற்படுகிறது.

இந்த அறிக்கை தெளிவு படுத்துவதில் பல நன்மைகளும் உள்ளடங்கி இருந்த போதிலும், இதில் உள்ள மாற்றி அமைக்க வேண்டிய தேவைகள் இன்றியமையாததாய் இருக்கிறது, காரணம் ஒரு தனிநபர் சமூக தளங்களில் பதிவிடும் பதிவானது  தானியக்க பட்ட செயல்பாட்டின் மூலம் (Automated Process) சமூதாயத்திற்க்கு புரம்பானது என கண்டறியபட்டால் அந்த பதிவினை நீக்கவும் மேலும் அந்த பதிவினை இட்டது யார் என்று 72 மணி நேரத்தில் கண்டறிந்து அவரது கணக்கு முடக்கபட்டும், மேலும் துறை சார்ந்த நடவடிக்கை எடுக்கவும் அதிகாரம் அளிக்கிறது இந்த அறிக்கை.

இதில் ஆராய்ந்து பார்க்க வேண்டிய முதல் குறிப்பு சமூகத்திற்க்கு புறம்பானவைகள் நீக்க படும் என்றே அறிக்கையில் வெளியிடபட்டது. ஆனால், எவை எல்லாம் புரம்பானது என்றும், எவையெல்லாம் சமூகத்திற்க்கு புரம்பான வட்டத்தில் வருகிறது என்ற எந்த ஒரு தெளிவும் கொடுக்கபடவில்லை ,இதை காரணமாய் கொண்டு பின் வரும் காலத்தில் சிலரின் தன்னலதிற்க்காக சமூகத்திற்க்கு புரம்பான வட்டத்தில் எதை வேண்டுமானலும் சேர்த்து நடவடிக்கை எடுக்கும் அபாயம் எற்படுகிறது. மேலும் தானியங்கும் கணினிகள் கடவுசொற்களை (Keywords) மையமாய் கொண்டே இயங்கும் பட்சத்தில் பல முரண்பாடுகள் ஏற்படும். இதையும் தாண்டி அடிப்படை குடிமகனின் உரிமைகளை மறைமுகமாக கூட அல்லாது நேரடியே மீறும் வகையில் அமையபெற்றிருக்கிறதா? என்ற அச்சமும் நீடிக்கிறது.

ஏனென்றால், இத்தகைய அதிகாரத்தைகொண்டு பல தனிநபர்களின் உரிமைகள்மீற படலாம். பலரின் சுயலாபத்திற்காக குறிவைத்து தரவுகள் கண்கானிக்கபடும் அபாயமும் எற்பட்டுள்ளது.மேலும், தனிநபரின் கருத்து மற்றும் பேச்சுரிமை பறிபோகவும் வாய்புள்ளது. மேலும், இத்தகைய அதிகாரம் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டும், பாராளுமன்றமோ அல்லது நீதி மன்றங்கள் போன்ற ஆட்சியளர்கள் சாராத அமைப்பின்  மேற்பார்வையில் அமைக்கபட்டு தனிநபரின் தனியுரிமை மீறாத வகையில் அறிக்கை திருத்தம் செய்யபட்டும் , அடிபடை குடிமக்களின் உரிமைகள் மீறாதவாறு அமைக்க பட்டுள்ளதா என்பதை உறுதி செய்தும் இந்த அறிக்கை வெளியிடப்பட வேண்டும். மேலும் அப்படி நிறைவேற்ற பட்டு அமல்படுத்த படும் கண்கானிப்பு முறை சட்ட திட்டங்களுக்கும் வறையரைகளுக்கு உட்பட்டும் தான் நடக்கிறது என்பதை உறுதி செய்ய வள்ளுநர் குழு அமைத்து மேற்பார்வை செய்திடும் தேவை இருப்பதையும் அரசுக்கு உணர்த்த குடியுரிமைகளை பாதுகாக்கும் குழுக்கள்,தொழில்நுட்ப வள்ளுநர் குழுக்கள், மேலும் தனிபுரட்சியாளர்கள் என அனைவரையும் இந்த அறிக்கையின் கூற்றை சட்டதிட்டத்திற்க்கு ஏற்ப மாற்றி அமைக்கும் முயற்சிக்கு ஒன்றாக கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளை தமிழ்நாடு அழைப்புவிடுக்கிறது.