உண்மையான இணையம் விழித்தெழுமா? Internet.org மற்றும் டிஜிட்டல் இந்தியா கலந்துரையாடல்
அழைப்பிதழ்
அன்புடையீர்
கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளை தமிழ்நாடு மற்றும் கேட்டலிஸ்டு வாசகர் வட்டம் உங்களை
உண்மையான இணையம் விழித்தெழுமா? Internet.org மற்றும் டிஜிட்டல் இந்தியா
கலந்துரையாடலுக்கு வரவேற்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேம்.
கடந்த சில வாரங்களுக்கு முன் முகநூல் பக்கங்களில் தன்விளக்கு படங்களை, இந்தியக் கொடியின் மூவண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் பல்லாயிரக்கணக்கானோர் மாற்றினர். இதன் மூலம் அவர்கள் நரேந்திர மோடியின் டிஜிட்டல் இந்தியா செயல் திட்டத்தை ஆதரிக்கும் வகையில் மாற்றினர்.
இதனால் முகநூல்; Internet.org, சமநிலை இணையம், தனிநபர் விவரங்கள், தகவல் சேமிப்பு போன்ற பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளாகியது. சில மாதங்களுக்கு முன் இந்தியாவில் சமநிலை இணையம் பற்றிய விவாதத்தில் Internet.org, சமநிலை இணைய கொள்கைக்கு எதிரான ஒரு சர்சைக் குறிய விஷயமாய் இருந்தது.
ஆக இந்த கலந்துரையாடலில் சமநிலை இணையம் மற்றும் முகநூலின் முயற்சியை மட்டும் உரையாடாமல், சமநிலை இணையம் செயல் திட்டம் மற்றும் அதனுடன் முகநூல் போன்ற நிறுவனங்களுக்கு இருக்கும் பங்கு என்ன என்பதை பற்றியும் விரிவாக கலந்துரையாடுவோம்.
பேச்சாளர்: திரு. ஸ்ரீநிவாசன் ரமணி இணை பதிப்பாசிரியர் தி இந்து தேதி
அக்டோபர் 11 2015 மதியம் 2-மாலை 5
இடம்: ஏசியன் காலேஜ் ஆப் ஜர்னலிசம் 2 ஆவது பிரதான சாலை, எம்.எஸ் சுவாமிநன்தன் ஆராய்ச்சி அறக்கட்டளை பின்னால்
சிஐடி வளாகம், தரமணி சென்னை, தமிழ்நாடு -600113.
தொடர்புக்கு: 044-43504670, 9962943247
பதிவேடுக்கு: http://tiny.cc/real-internet-discussion
முன்பதிவு செய்ய: http://www.meetup.com/Free-Software-Foundation-TamilNadu/events/225917923/?fromEmail=225917923
போஸ்டர்கள்: https://www.flickr.com/photos/133959926@N05/albums/72157659851514738
செயல்திட்டம்: http://plan.fsftn.org/b/CFgZgzW8KstgxouGp/internet-dot-org-discussion
ஒலிக்கேப்புகள்:
https://soundcloud.com/fsftn/will-the-real-internet-please-stand-up