கல்வியும் கட்டற்ற மென்பொருளும்
கல்விக்கூடங்கள் கல்வியின் மூலம் எதிர்காலச் சமூக மாற்றத்திற்கு வழிவகுக்கிறது. அவை கட்டற்ற மென்பொருளை எதிர்கால நன்மைக்காக கற்றுத்தரவேண்டும். அவைகள், கட்டுப்பாடு உள்ள மென்பொருள்களை மாணவர்களுக்கு பயிற்றுவிக்கக்கூடாது. அவை, சார்புடைமையையும், மென்பொருள் கட்டுப்பாடுகளையும், அறைகுறை அறிவையும் கற்றுத்தருகிறது. இது கல்விமுறைக்கு எதிரானது. கட்டற்ற மென்பொருள் கொண்டு கற்றுத்தருவதன் மூலம், எதிர்காலத்தில் சுதந்திரத்துடனும், திறமையுடனும் மாணவர்கள் உருவாவார்கள்.
அவை மாணவர்கள் கூட்டூழைப்புடன் செயல்படவும் உதவவும் கற்றுத்தரும். ஒவ்வொரு வகுப்பரையிலும் இந்த விதிகள் இருக்க வேண்டும்,
மாணவர்களே, வகுப்பறைதான் நாம் அறிவைப் பகிர்ந்து கொள்ளும் இடம். நீங்கள் வகுப்பறைக்கும் மென்பொருள் எடுத்து வந்தால், நீங்கள் அதை மற்ற மாணவர்களுடன் பகிர வேண்டும். ஆகையால், கட்டுப்பாடு உள்ள (Proprietory Software) மென்பொருளை பள்ளிக்கு எடுத்துவராதீர்கள்.
கட்டுப்பாடு உள்ள மென்பொருளை உருவாக்கும் Developer-கள் நம்மை நம் மாணவர்களை தண்டிக்கவைக்கிறார்கள். மாணவர்கள் இயல்பிலேயே பகிரும் குணம் உடையவர்கள், அவர்கள் மென்பொருளை ஆராய்ந்து அதிலிருந்து கற்றுக்கொள்ள நினைப்பவர்கள். கட்டற்ற மென்பொருளை கல்விக்கூடங்களில் பயன்படுத்துவது பற்றி மேலும் பல கட்டுரைகளை வரும் காலங்களில் பார்ப்போம்.
நன்றி - ரிச்சர்ட் ஸ்டால்மேன்
இந்த பக்கம் Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License உரிமத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ளது.