கிசான் ஏக்தா மோர்ச்சாவின் முகநூல் பக்கம் முடக்கம் | FSFTN கண்டணம்

டெல்லியில் புதியதாக கொண்டுவரப்பட்டுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக நடந்து வரும் விவசாயிகளின் போராட்டம் நாம் அறிந்ததே. இப்போராட்டத்தை முன்னின்று மேற்கொண்டு வரும் கிசான் ஏக்தா மோர்ச்சாவின் முகநூல் பக்கம் அண்மையில் முடக்கப்பட்டது. பின்னர் பல்வேறு தரப்பு கண்டனங்கள் எழுந்த நிலையில் விவசாயிகளின் முகநூல் பக்கத்தின் முடக்கத்தை நீக்கியது. இது தற்செயலான நிகழ்வு என்று கடந்த செல்ல முடியாது. அண்மையில் ரிலையன்ஸ் குழும தலைவர் முக்கேஷ் அம்பானி மற்றும் Facebook குழும தலைவர் மார்க் ஸுக்கர்பர்க் இணைய நேரலையில் கலந்துரையாடினர். இந்நிகழ்வில் ஜியோ மற்றும் Facebook ஆகிய இருபெரு நிறுவனங்களும் இந்தியாவில் தகவல் தொழில்நுட்பத்தில் இணைந்து செயல்பட உள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த கலந்துரையாடல் நடந்த பிறகே விவசாயிகளின் முகநூல் பக்கம் முடக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. முறையான காரணங்கள் ஏதும் தெரிவிக்காமல் இது போன்ற எளியமக்களின் குரலை ஒடுக்கும் முகநூல் நிறுவனத்தின் போக்கை  கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளை தமிழ்நாடு வன்மையாக கண்டிக்கிறது.

Executive Committee
FSFTN