OMR புத்தக கண்காட்சி 2019 - FSFTN பங்கேற்பு
OMR புத்தகக் கண்காட்சி சூன் மாதம் 15 முதல் 19 வரை OMR-ல் உள்ள பெருங்குடி வள்ளலார் சன்மார்க்க அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்வை பாரதி புத்தகாலயம், சாய் நகர் மக்கள் சங்கம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம், உடன் சேர்ந்து கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளை தமிழ்நாடு சேர்ந்து நடத்தியது.
கட்டற்ற மென்பொருள் அரக்கட்டளை தமிழ்நாடு சார்பில் அங்கே ஒரு Stall போடப்பட்டது. அந்த Stall-ல் Wireless Community Network மக்களின் பார்வைக்கு முன் வைக்கப்ட்டது. புத்தகக் கண்காட்சிக்கு வரும் மக்களிடம், கட்டற்ற மென்பொருள் என்றால் என்ன? அதன் அவசியம் என்ன? Wireless Community Network-இன் நோக்கம் என்ன என்பதை பற்றி விளக்கியதோடு மின் புத்தகங்கள், Amazon போன்ற நிறுவனங்கள் மூலம் தனியுடைமை ஆக்கப்படுவதைப் பற்றியும், அதற்க்கு மாற்றான Creative Commons போன்ற உரிமங்களைப் பற்றியும் எடுத்துரைக்கப்பட்டது.
இந்த நிகழ்வின் மூலம் மக்களிடம் நல்ல ஒரு கலந்துரையாடல் ஏற்ப்பட்டது. கட்டற்ற மென்பொருள் இயக்கத்தின் கருத்துக்களையும், செயல்பாட்டையும் கொண்டு சேர்க்க முடிந்தது.
இந்த புத்தகக் கண்காட்சியில் கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளைக்கு வாய்ப்பு அளித்த தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்ந்த தோழர்களுக்கு FSFTN நன்றி தெரிவித்துக்கொள்கிறது.
இந்த நிகழ்வின் படங்களை இங்கே காணலாம் - https://files.fsftn.org/apps/gallery/s/XRpkKt9A6eDq9Rt
நன்றி