பள்ளிக்கூடங்கள் ஏன் கட்டற்ற மென்பொருள்களை கற்றுக்கொடுக்கவும், பயன்படுத்தவும் வேண்டும்?

பள்ளிக்கூடங்கள் ஏன் கட்டற்ற மென்பொருள்களை கற்றுக்கொடுக்கவும், பயன்படுத்தவும் வேண்டும்?
"பள்ளிக்கூடங்கள் தங்களது மாணவர்களை திறமையான, வலுவான, சுதந்திரமான சமூகத்தின் குடிமக்களாக இருக்க கற்றுத்தர வேண்டும்"

பள்ளிக்கூடங்களும் பல்கலைக்கழகங்களும் ஏன் கட்டற்ற மென்பொருள் பயன்படுத்த வேண்டும் என்பதற்கு மூன்று காரணங்கள் உள்ளன.

Photo by Church of the King on Unsplash

பகிர்தல்

பள்ளிக்கூடங்கள் பகிரும் குணாம்சத்தில் மாணவர்களுக்கு உதாரணமாக இருக்க வேண்டும். கட்டற்ற மென்பொருள், அறிவு மற்றும் அது கொண்டு செய்யப்படும் கருவிகளை (Tools) பகிரவும், பொதுவில் வைக்கவும் கற்றுத்தருகிறது.

அறிவு

பல இளைய மாணவர்கள் Programming திறமை கொண்டவர்கள். அவர்கள் கம்பூட்டர்களைக் கண்டு பிரம்மிப்பு அடைகின்றனர். அது எப்படி வேலை செய்கிறது என்பதை கற்றுக்கொள்ள ஆசைப்படுகின்றனர். கட்டுப்பாடில்லாத சுதந்திரத்தன்மையற்ற மென்பொருள் எப்படி வேலை செய்கிறது என்பதை ஆசிரியர்களால் மாணவர்களுக்கு சொல்லித்தர இயலாது. ஏனெனில் அத யாராலும் கண்டறிய முடியாது. ஆனால் கட்டற்ற மென்பொருள் மூலம் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு அந்த மென்பொருளைப் பற்றி கற்றுக்கொடுத்து, அதை அவர்களுக்கு வீட்டிற்கும் கொடுத்து விடலாம். இவை அனைத்திற்கும் அதன் உரிமம் அனுமதியளிக்கிறது.

Photo by Markus Spiske on Unsplash

கருவிகள்

ஆசிரியர்கள் மாணவர்களுக்கு அந்த Program-இன் நகலையும் வீட்டிற்க்கு கொடுத்து அனுப்பலாம். கட்டற்ற மென்பொருள் பகிர்தலை ஆதரிப்பதையும் தாண்டி ஊக்குவிக்கிறது.

சமூக கடமை

கம்ப்யூட்டரை பயன்படுத்துவது அன்றாட வாழ்க்கையில் ஒன்றாக மாறிவிட்டது. தொழில்நுட்பங்கள் மக்களின் வாழ்வில் மிக விரைவாக தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. மென்பொருள்கள், மென்பொருள் உருவாக்குபவரின் கட்டுப்பாட்டில் இருக்கக் கூடாது. அவை பயனாளர்களின் தேவைக்கு இருக்க வேண்டும். அவர்களின் தேவைக்கு மாற்றி பயன்படுத்தும் வகையில் அமைய வேண்டும். கல்வி நிலையங்கள், Proprietary Software-கள் சமூகத்தின் மீது ஆதிக்கம் செலுத்துவதை அனுமதிக்க கூடாது. அது எதிர்காலத்துக்கு நல்லதல்ல.

சுதந்திரம்

  • Proprietary Software கம்பெனிகள், பள்ளிக்கூடங்களை தனது பயனாளர்களை அதிகரிப்பதற்காக கையில் போட்டுக்கொள்கிறது.  இதன் மூலம் அடுத்த தலைமுறை முழுவதும் தனது மென்பொருள்களை சென்றடையச்செய்து, தனது இருப்பை உறுதி செய்துகொண்டு, லாபம் பார்க்கிறது. அந்த கம்பெனிகள் பள்ளிக்கூடங்களுக்கு பல சலுகைகளை அள்ளித்தருகிறது. இதன் மூலம் மாணவர்கள் அனைவரும் இந்த மென்பொருள்களை சார்ந்து இருக்க கூடிய நிலை ஏற்படும். அவர்கள் படித்து முடித்த பின்பு அவர்களிக்கு இந்த சலுகைகள் எல்லாம் கிடைக்காது.
  • கட்டற்ற மென்பொருள் உரிமங்கள் காலாவதி ஆகாது. அதை பயன்படுத்தும் பள்ளிக்கூடங்கள் அதை பயன்படுத்திக்கொண்டே இருக்கலாம். பள்ளிக்கூடங்கள் அந்த மென்பொருள்களை அவைகளுக்கு ஏற்றார்போல் மாற்றியமைத்துக்கொல்ளலாம். மாற்றியமைத்த மென்பொருளையும் பகிர்ந்துகொள்ளலாம்.
Creative Commons and Community (unDraw)

கற்றல்

கற்றற்ற மென்பொருள் கொண்டு கற்றுத்தரும் போது மாணவர்கள் அதை முழுவதுமாக புரிந்துகொள்வது மட்டுமல்லாமல், அதை உருவாக்கும் முறை மற்றும் அந்த Developer-கள் கடைபிடிக்கவேண்டிய Ethics அனைத்தையும் புரிந்துகொள்கின்றனர். அவர்களின் பணியிடங்களில் இந்த அறிவு மிகவும் தேவைப்படுவதாகவும், அவசியமுடையதாகவும் அமைகிறது.

சேமிப்பு

கட்டற்ற மென்பொருளின் இந்த குணம் தான் பல பள்ளி நிர்வாகிகளை ஈர்க்கிறது. சேமிப்பு, நிறுவவும், பகிரவும், பல கணிணிகளில் பயன்படுத்துவதில் எந்த தடையும் இல்லை. இது அனைத்து பள்ளிகளுக்கும், அனைத்து தரப்பு மக்களுக்கும் எளிமையாக கிடைக்கும் வகையில் அமைகிறது.

தரம்

கல்விக்கு தேவையான அனைத்து கட்டற்ற மென்பொருள்களும் பல வகைகளில் கிடைக்கிறது. அதன் தரம் நாளுக்கு நாள் அனைவரின் பங்களிப்பினாலும் உயர்ந்துகொண்டுதான் இருக்கிறது.

இறுதி இலக்கு மென்பொருள் சுதந்திரமும் அறிவுசார் பொதுவுடைமையும் தான்!

நன்றி - GNU வலைதளம்

இந்த பதிவு Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License உரிமத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ளது.